#SRHvsLSG – டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை,  பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா, ஹைதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத், லக்னோ,  ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இதுவரை 56 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தி இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இதையும் படியுங்கள் : குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு செய்கிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.  கே.எல்.ராகுல் தலைமையிலான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில்            5-வது இடத்தில் உள்ளது.  இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.