ஆரணி அடுத்த எஸ் வி நகர கிராமத்தில் மாசி மாத பிரம்மோற்சவ 150 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ் வி நகர கிராமத்தில் 150 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 150 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் கிராமமே விழாக் கோலம் பூண்டது. அனைத்து இல்லங்களில் வண்ணக் கோலங்கள் தேரை வரேவேற்கும் விதமாக சிறப்பாக போடப் பட்டிருந்தது.
தேரில் அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் தலாட்டில் அமர வைத்து கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் உலா வந்தன. மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களின் முன்பு வரும் தேரில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து ஆட்டுகிடாய் வெட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை பிடித்து இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
-அனகா காளமேகன்







