சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்; கல்வித்துறை

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய…

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.