தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. மேலும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மிகப் பெரிய இரண்டு நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இரு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரையரங்குகள் கேட்டதாகவும், ஆனால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
ஏற்கனவே விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதல் நிலவிவரும் நிலையில், தில் ராஜூவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில், அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.