இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2023 – 24ம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதில், இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. தேர்வின் முதல் கட்ட அமர்வு ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இரண்டாவது அமர்வு ஏப்ரல் 6, 8, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூட் தேர்வு மே 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.







