தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 14-ம் தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல், மாட்டுப்பொங்கலுக்கு பொங்கல் வைத்து மக்கள் கொண்டாடினர். மேலும், பலரும் திரையரங்குகளுக்கு செல்வது, கடற்கரைக்கு செல்வது என குடும்பத்துடன் பண்டிகை விடுமுறை நாட்களை செலவிட்டனர்.
மேலும், பல இடங்களில் ஊர் சார்பாக குழந்தைகள், பெண்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனுடன், அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியும் வைப்பட்டது.
இதற்கிடையே, காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார்னிவல் விழா நிறைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (19.01.26) விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.







