மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்!

50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியில் ‘குருங்காடு…

50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியில் ‘குருங்காடு
வளர்ப்பு திட்டத்தை’மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
எல்லப்பள்ளி பகுதியில் தண்ணிகார வட்டத்தில், கடந்த 50 ஆண்டு காலமாக சாலை
வசதி இல்லாததால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடைபாதை வழியாக நடந்து
சென்று நாள்தோறும் கடும் சிரமம் அடைவதாக கூறினர்.

அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் சாலை வசதி இல்லாமல், கடும் சிரமம்
அடைவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நடந்து செல்லும் பாதையை
மாற்றி சாலை வசதியை ஏற்படுத்த வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் வட்டார
வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சாலை வசதி செய்து தரப்படும்
என்று கூறியதால், பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.