காதல்வலை வீசி ஐடி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி: டிப் டாப் இளைஞர் கைது!

சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன பெண் மேலாளரிடம் பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  10 லட்ச ரூபாய்  மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர்  35 வயதான ஜான்சன் அருள்மாறன்.…

சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன பெண் மேலாளரிடம் பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  10 லட்ச ரூபாய் 
மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.  
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர்  35 வயதான ஜான்சன் அருள்மாறன். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளார். அப்பெண் பெருங்குடியில் உள்ள பெண்கள் விடுதியில்  தங்கி பணிக்கு சென்று வருகிறார்.
ஒரு கட்டத்தில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை
கூறியுள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், பார்ப்பதற்கு படித்த பணக்கார
பையன் போன்று இருப்பதால்  சமூக வலைதளங்களில் பல பெண்களிடம் தொடர்பில் இருந்துள்ளார்.
.
ஒரு கட்டத்தில்  ஜான்சன் அருள்மாறனுக்கு பல பெண்களுடன்தொடர்பு இருப்பது அப்பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜான்சன் அருள்மாறனிடம் கேட்ட போது மிரட்டல் விடுத்ததுடன் அப்பெண் கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து  அப்பெண் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜான்சன் அருள்மாறனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வேலைக்கு செல்லாமல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
பேஸ்புக், ஜெண்டர் ஆப், லிங்க் கிரீன் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்
பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணம் கறப்பதில் கில்லாடியாக இருந்துள்ளார் ஜான்சன் அருள்மாறன். இருவரும் காதலிக்க ஆரம்பித்த அடுத்த வருடமே ஜான்சன் அருள்மாறனுக்கு  சுமார் 2 லட்சம் மதிப்புள்ள  பைக் ஒன்றை அப்பெண் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜான்சன் அருள்மாறன் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வந்த தனியார்
வங்கியின் துணை தலைவராக இருந்த ஒரு பெண்ணிடம் காதல் வலை வீசி
அந்த பெண்ணையும் ஏமாற்றி பழகி வந்ததும், அந்த பெண் வெளி ஊருக்கு செல்லும்போது
பெரும்பாக்கத்தில் உள்ள (தனியார் வங்கி துணை தலைவர்) அவரது வீட்டை தன்னுடைய
வீடு என்று பாதிக்கப்பட்ட ஐடி பெண் மேலாளரை அங்கு அழைத்து சென்று தனிமையில்
இருந்ததா கூறப்படுகிறது.  இதனையடுத்து அருள்மாறன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுததி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.