முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி இன்று வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த படம் முன்னதாக ஜூலை 31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் வெளியாக உள்ளது.




