சீட்டுக்கட்டு தொடர்பான பாடம், 6ம் வகுப்பு 3ம் பருவ கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
’ரம்மி’ விளையாட்டினை உதாரணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு 3ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில், ‘முழுக்கள்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய தமிழ்நாடு அரசு முயற்சித்து வரும் நிலையில், தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி பாடம் வடிவமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அந்த பாடப்பகுதியை நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது, 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பூஜ்யம், குறை எண்கள், மிகை எண்கள் ஆகியவற்றின் தொகுப்பு, முழுக்களை உருவாக்கும் என்ற கணித முறையை விளக்குவதற்காக இப்பாடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.