சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த எல்.பாலாஜி தனிப்பட்ட காரணத்தால் ஒரு வருடம் ஓய்வு கேட்டுள்ள நிலையில் பிராவோ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிராவோ 2011 ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே.அணிக்கு விளையாடி வந்தார். 2023 ம் ஆண்டுக்காக அணி வீரர்கள் பட்டியலில் பிராவோ உட்பட 8 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்போது பிராவோ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனார்.
சிஎஸ்கே அணிக்காக 144 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிராவோ, 168 விக்கெட்டுகளும், 1556 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றதில் 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் பிராவோவின் பங்கு இருந்துள்ளது. 2010ல் சிஎஸ்கே கோப்பை வென்ற போது மும்மை அணியில் பிராவோ இருந்தார்.