ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 2வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியின் போது முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் கேபட்னான ரிக்கி பாண்டிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார்.
போட்டி நடைபெற்று கொண்டிருக்கையில் அவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.