ஜோதி அறக்கட்டளை சார்பில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக வறுமை நிலையில் இருந்த மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர், தனது மகன் இறந்த நிலையில், பேரக்குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வேண்டுமென நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் வழியாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து ஜோதி அறக்கட்டளை சார்பில் மகன் வழி பேரக்குழந்தைகளுக்கு இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை, எழுது பொருட்கள் மற்றும் பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும் வறுமையில் உள்ள அந்தோணிசாமியின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
உதவியை பெற்றுக் கொண்ட அந்தோணிசாமி குடும்பத்தினர் நியூஸ்7தமிழ் அன்பு பாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர். நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், விளிம்புநிலை மக்களுக்கான உதவிகளை நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தார்.
– ஜெனி









