திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு இரண்டாம் நாளாக போட்டி போட்டுக்கொண்டு அக்கட்சி நிர்வாகிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுகவின் 15 ஆவது உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கி இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், திமுகவின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், திமுகவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர்.
நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகின்றது. தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இன்பசேகரன் உள்ள நிலையில், அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மனுத்தாக்கல் செய்தார். ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமியும், கரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் மனுத்தாக்கல் செய்தனர்.
-ம.பவித்ரா








