முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 29ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

24ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும். 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் செயல்படத் தொடங்கியது இ-பதிவு இணையதளம்

Halley Karthik

கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் தற்கொலை முயற்சி!

G SaravanaKumar

வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

Web Editor