முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. மலேசிய குடியுரிமை பெற்ற இவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் கூறி இருந்தார்.

அதில், மணிகண்டன் திருமணம் செய்வதாக சொல்லி கணவன் மனைவி போல தன்னுடன் ஐந்து வருடங்கள் வாழ்ந்ததாகவும் மூன்று முறை கர்ப்பம் அடைந்து அவர் மிரட்டலால் அதை கலைத்ததாகவும் கூறியிருந்தார். தற்போது திருமணம் பற்றி பேசினால் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரித்து, மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், சென்னையில் இருந்து வழக்கை நடத்த வேண்டும் என்பதால் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகையாக வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Advertisement:

Related posts

மார்ச் 21-ம் தேதி பூமியை நெருங்கும் சிறுகோள்!

Jeba Arul Robinson

இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்!

Ezhilarasan

தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!

Ezhilarasan