சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி முரளி சங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, வழக்கில் தம்மையும் எதிர் மனுதாரராக சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சிபிஐ தரப்பில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் ரகு கணேஷிற்கும் தொடர்பு உள்ளது எனவும், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதால், ஜாமின் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயராஜின் மனைவி தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.