சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்

நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு…

நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், நாட்டிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கான ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவ பரிசோதனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாவட்ட சுகாதாரப் பேரவை மருத்துவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகள், சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்கள் என 9 பேருக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட, ஆயிரத்து 370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை, சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.