சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன்பாக 1மணி நேரம் சாட்சியம் அளித்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.