கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் சதீஷ் (வயது 35) என்ற விவசாயி அவரது விவசாய தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு இருக்கும் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் விவாசயம் செய்துவருகின்றனர்.
மேலும் அவர்கள் இரண்டு பால் மாடுகளை வளர்த்து வருகின்றனர், இதில் ஒருமாடு ஒரு கன்று குட்டியை ஈன்றுள்ளது. அந்த பெண் கன்று குட்டி ஒட்டிப்பிறந்த இரண்டு தலைகளுடனும், நான்கு கண்கள், இரண்டு வாய்கள் மற்றும் இரண்டு மூக்குகளுடன் பிறந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக பிறந்துள்ள இந்த கன்றுகுட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். மேலும் அந்த கன்று குட்டியுடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துவருகின்றனர்.








