சாஸ்த்ரா பல்கலைகழக நில விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவு!

சாஸ்த்ரா பல்கலைகழக நில விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​மலைச​முத்​திரத்​தில் திறந்​தவெளி சிறைச்​சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்​கர் புஞ்சை தரிசு நிலத்​தை, சாஸ்த்ரா பல்கலைக்​கழகம் ஆக்​கிரமிப்பு செய்​து, அந்த நிலத்​தில் பெரிய அளவில் கட்டிடங்கள் கட்​டி, வகுப்​பு​களை நடத்தி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பாக சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த உயர்நீதி​மன்​றம், சாஸ்த்ரா பல்​கலைக்​கழகத்​தால் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்ட நிலத்தை வருவாய்த் துறை மீட்க வேண்​டும் என்று கடந்த ஜனவரி 9ம் தேதி உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, வரு​வாய்த் துறை​யினர் ஆக்​கிரமிக்​கப்​பட்​டிருந்த நிலத்தை தங்கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு​ வந்ததோடு “இது அரசு நிலம், அத்​து​மீறி நுழைபவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்ற அறி​விப்பு பலகையும் வைத்தனர்.

இந்த உத்தரவை எதிா்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கல்வி சார்ந்த செயல்பாடுகளில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதை விரும்புவதாகவும், எனவே, சர்ச்சைக்குரிய நிலம் ஒரு கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த நிலத்திற்குப் பதிலாக மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்துப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழக நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா

பல்கலைக்கழகம் வழங்கிய மாற்று நில விருப்பங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விசயத்தில் மிகப்பெரிய அளவிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதுடன், நிலத்தைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.