கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது எல்லா மக்களின் கோரிக்கை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தீபம் ஏற்ற அறிவுறுத்தியும் அரசு மறுக்கிறது.
இப்பிரச்சினையில் முதல்வருக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இது தீபத் தூண் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறார்கள். 1923ம் ஆண்டு முதல் வழக்கு ஆரம்பித்து, இவ்வழக்கில் பல்வேறு தீப்புகளில் நீதிபதிகள் அதே தீர்பை உறுதி செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் அதை உறுது செய்துள்ளது. தலைமை நீதிமன்றம் சொல்லியும் ஏன் ஏற்க மறுக்குறீர்கள். தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சினை, பல்வேறு இந்து கோவிலுக்கு செல்வது பகல் வேசமா, ஒட்டுமொத்த இந்துக்களின் விரோதி, தவெகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரச்சினைகளுக்கு பதில் சொல்கிறீர்கள் முதல்வர், சட்டம் ஒழுங்கு, போதை பொருள் புழக்கம் போன்றவற்றை தடுக்காமல் முழுக்க முழுக்க தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.
காவிரி தண்ணீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நாளை திருக்கார்த்திகை சொக்கப்பனை கொழுத்துவது, தீபம் ஏற்றுவது போன்றவை தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், வீடுகளில் விளக்கு ஏற்றுவது ஐதீகம். இந்த ஆண்டு ஏற்றுங்கள், அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளளாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும், முதல்வர் மறைக்கிறார், மறுக்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். விரைவில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என்றார்.




