’5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன்’: சசிகலா அடுத்த ஆடியோ

ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஆசி பெற்று வரும் 5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவிற்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் கடிதம் எழுதி…

ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஆசி பெற்று வரும் 5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவிற்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் கடிதம் எழுதி வருகின்றனர். அவ்வாறு கடிதம் எழுதும் தொண்டர்களிடையே தினமும் சசிகலா தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த ஆடியோ தினமும் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் அமமுகவின் செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணனிடம், சசிகலா பேசிய ஆடியோ இன்று வெளியானது. அதில், எல்லாம் நல்லப்படியாக சென்று கொண்டிருப்பதாகவும், தலைவரும், அம்மாவும் கட்சியை வழிநடத்தியது போல, அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வரும் 5 ஆம் தேதிக்குப் பின் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு, அனைத்து தொண்டர்களையும் நேரில் சந்திப்பேன் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.