ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் பதவிக் காலம் அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.







