நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏவும், மேற்கு வங்க பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி சொலிசிட்டர் ஜெனரல் தூஷர் மேத்தாவை சந்தித்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாரதா ஊழல் வழக்கில் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முன்னாள் திரிணாமுல் தலைவர்கள் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், அரசின் தலைமை வழக்கறிஞர் தூஷர் மேத்தாவை சுவேந்து சந்தித்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தலைமை வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு மமதா கடிதம் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு குறித்து மமதா கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், மேத்தா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தன்னை சந்திக்க சுவேந்து முன்னறிவிப்பின்றி வந்திருந்ததாகவும், அதனால் தன்னுடைய தினசரி பணிகளில் காரணமாக தன்னால் சுவேந்துவை சந்திக்க முடியவில்லையென்றும் கூறியுள்ளார். சுவேந்துவுடனான தனது சந்திப்பு நிகழ்வு எதுவும் நடக்கவில்லையென்று மேத்தா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் பகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டதிலிருந்து மமதாவுக்கும் சுவேந்துவுக்குமான மோதல் போக்குகள் தீவிரமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.