வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ஆம் தேதி தியாகராய நகர் இல்லத்தில் இருந்து கிளம்பும் சசிகலா திருச்சி செல்வதாக கூறப்பட்டுள்ளது. திருச்சியில் உத்தமர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், குணசீலம், முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லில், முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு’
பின்னர், திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக எடப்பாடி சென்று அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் வழிபடுவதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், 12ஆம் தேதி சேலத்தில் இருந்து தாரமங்கலம், மேட்டூர், அம்பாபேட்டை வழியாக சத்தியமங்கங்கலம் சென்று பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபடுகிறார். பின்னர் கோவை வழியாக சென்னை திரும்புகிறார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்த நிலையில், அவரின் சொந்த மாவட்டத்திற்கு சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








