ஒகேனக்கல்லில், முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஒகேனக்கல்லில் உள்ள பண்ணையில் முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.…

ஒகேனக்கல்லில் உள்ள பண்ணையில் முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதலைகளை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக பராமரிப்பு மையத்தின் பணியாளர்கள், முதலைகளை தாக்குவதாகவும், அவைகளை கொடுமைப்படுத்தாகவும் உயிரியின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மைச் செய்தி: ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் – அமைச்சர் மெய்யநாதன்

மேலும், முதலைகளுக்கு போதிய உணவு வழங்காததால், அவைகள் ஒன்றுக்கொன்று கடித்து கொண்டு காயம் ஏற்பட்டு இறக்கும் பரிதாப நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ஒகேனக்கல்லில் உள்ள மறுவாழ்வு மையத்தில் உள்ள முதலைகளுக்கு வாரத்திற்கு 4 முறை உணவளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.