சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

திமுக, அதிமுகவை வீழ்த்துவதே அமமுக – தேமுதிக கூட்டணியின் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,…

திமுக, அதிமுகவை வீழ்த்துவதே அமமுக – தேமுதிக கூட்டணியின் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் சுமூகமாக கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.

சசிகலாவின் மானசீக ஆதரவு அமமுக – தேமுதிக கூட்டணிக்கு இருப்பதாக குறிப்பிட்ட டிடிவி தினகரன், திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்துவதற்காகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.