மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு…

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரை அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். இந்த அறிக்கையில் மதிமுக 55 வாக்குறுதிகள் அளித்துள்ளது.

அதில் குறிப்பிடும்படியாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்வியை பொதுப்பிரிவில் இருந்து மாநில பிரிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயிகளுக்கு மதிமுக முக்கியத்துவம் அளிக்கும். குறிப்பிடும்படியாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் வேளாண் கல்லூரிகள் அமைக்க மதிமுக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் அத்துடன் வேளாண் சார்ந்த தொழில்களான தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, சிப்பிக் காளான் விளைவித்தல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தி கிராம ஊராட்சி முதல் தலைமை செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய மதிமுக குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.