முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். 

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டுமெனவும், தான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அறிக்கை வெளியிட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது அதிமுக. இதனிடையே சசிகலா தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை சசிகலா பேசி வருகிறார்.  எனினும், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அவருடன் பேசும் சசிகலா அதிமுகவை தனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது எனவும் தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்காக நிச்சயம் அரசியலுக்கு வருவேன் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

குழந்தைகளுக்கான பிரத்தியேக கார்கள்: எதற்காகத் தெரியுமா?

Jeba

தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்

Karthick

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

Jeba