முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 14ம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, அன்றைய தினம் சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் தலைமை அலுவலகம் வர வேண்டாம் என்றும், அதிமுக தலைமை அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சசிகலா தொண்டர்களுடன் பேசுவது தொடர்பாகவும், சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:

Related posts

பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!

Jeba

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்!

Jeba

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

Gayathri Venkatesan