முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

ஷாங்காய் பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல்!

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் படம் திரையிடப்பட இருக்கிறது.

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் படங்கள் தயாரித்தும் விநியோகித்தும் வருகின்றனர். நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தயாரிக்கும் அவர்கள் கூழாங்கல் என்ற படத்தையும் தயாரித்துள்ளனர். பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கூழாங்கல் படம், ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. இதைத் தவிர்த்து பல்வேறு சர்வதேச பட விழாக்களிலும் இந்தப் படம் கலந்துகொண்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது, ஷாங்காய் திரைப்பட விழாவில் படம் கலந்துகொள்கிறது. நாளை முதல் 20- ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பட விழாவில், சூர்யாவின் சூரரைப் போற்று, கூழாங்கல் ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

Advertisement:

Related posts

ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!

Jayapriya

இந்த எண்ணை அழைத்தால் காய்கறி, மளிகை உங்கள் பகுதிக்கு வரும்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

Jeba