திருவொற்றியூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவருடன் வந்து சசிகலா,…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவருடன் வந்து சசிகலா, சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது சசிகலா அரசியலை விட்டு விலகியுள்ள நிலையில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தார். வடிவுடையம்மன், வட்டப்பாறை அம்மன், ஆதிபுரீஸ்வரர் சன்னதியில், சசிகலா சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.