உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக வினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியாளர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி நாளை (ஏப்.13) நடைபெறுகிறது.
https://twitter.com/KartiPC/status/1778625234557718879?t=yBs3fdh9jEB6K5x6OG64Rw&s=08







