பீகாரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணி ஓய்வுபெறும் நாளை திருமண நிகழ்ச்சிபோல பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிட்டேடில் உறுப்பினராக உள்ளார் தூய்மைப் பணியாளார் ராம் பாபு. இவர் கடந்த 40 ஆண்டுகளாக மாநகராட்சியில் தூய்மைப் பணியாளாராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தன்னுடைய பணி ஓய்வுநாளை திருமண நாளைப்போல பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைத்தார் ராம் பாபு. இதையடுத்து, குதிரைகள், யானைகள், பேண்ட் இசைக்குழு போன்றவற்றுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்தார். இசை வாத்தியங்கள் முழங்க மணமகனைப் போல குதிரை மீது ராம் பாபு ஏறிச் சென்றார். இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து, ராம் பாபு கூறுகையில், 40 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளாராகப் பணியாற்றிவிட்டேன். என்னுடைய பணி ஓய்வுநாளை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டேன். கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. அதனால், இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன் என்றார்.
ரிட்டையர்மென்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய இந்த நிகழ்வு அனைத்துத் தரப்பு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.