“காப்பாற்ற கை கோர்ப்போம்” – துருக்கி மக்களுக்காக அழைப்பு விடுத்த மணற்சிற்பம்

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை…

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பங்களை சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் 5,000-க்கும் மேற்பட்ட  கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக துயரமான தருணத்தில் உள்ள துருக்கி மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த சுதர்ஷன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கை கோருங்கள்” என்ற செய்தியை மணற்சிற்பத்தின் அருகில் எழுதியுள்ளார். அவர் வடிமைத்துள்ள மணற்சிற்பத்தில், ஒரு கட்டடத்தின் இடிபாடுகளுடன் சிறுவனின் உடல் இருப்பதாக சித்தரித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.