ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வழக்கில் மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிந்த நிலையில், மத்திய அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சிக்கலான விஷயம் குறித்து சமூகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் , சிவில் சமூக குழுக்களிலும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : “பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எனவே இவ்வழக்கில் மனுதாரர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளை எல்லாம் நாடாளுமன்றத்திடம் விட்டுவிட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். திருமணம் என்பது தனிநபர் சார்ந்தது என்றாலும் வயது, விவாகரத்து போன்றவற்றை முடிவு செய்ய மாநில சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் தலையிட வேண்டியுள்ளது என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார்.