6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற…

குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குளித்தலை வட்டக்கிளை தலைவர் பரிமளம் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரை ஆற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடந்த 1-1- 2023 முதல் வழங்க வேண்டிய 3%
அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உடனே வழங்க வேண்டும்,
புதிய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் கூறினர்.

—ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.