பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டார். டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியா வந்த மெஸ்ஸி, கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கால்பந்து நிகழ்ச்சியிகளில் கலந்து கொண்டார். மேலும் அவர் இந்தியாவில் உள்ள இளம் கால்பந்து வீரர்களையும் சந்தித்தார். இதனையடுத்து மெஸ்ஸி இந்தியாவை விட்டு புரப்பட்டார்.
மெஸ்ஸியில் இந்திய வருகையின் முதல் நாளான டிசம்பர் 13ஆம் தேதி கொல்கத்தாவின் சால்ட் மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மெஸ்ஸியை காண நீண்ட தூரத்திலிருந்து வந்த ரசிகர்கள், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட்டுகள் வாங்கியிருந்தனர். ஆனால் மைதானத்திற்கு வருகை தந்த மெஸ்ஸி 22 நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார்.
இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இருக்கைகளை உடைத்தனர்; தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதனால் சால்ட் லேக் மைதானமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இதனை தொடர்ந்து வன்முறை சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கோரிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைத்தார். மேலும் முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
இதர்கிடையே மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை எனவும் இதற்கு மேற்கு வங்க விளையாட்டு துரை அமைச்சர் அரூப் பிஸ்வாவே காரணம் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.







