19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார்.
இந்த நிலையில் சென்னை அணியானது பல்வேறு இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கி வருகிறது. அதன் படி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவை சென்னை அணி ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதே போல உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை அணி ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான மேத்யூ ஷார்டை – 1.50 கோடிகக்கும் , முன்னாள் டெல்லி அணி வீரரான அமன் கானை 40 இலட்சத்திற்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
மற்ற அணிகளை பொருத்த வரை, வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் அய்யரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.







