#Salem | பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து… ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசம்!

சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் ஜெகதீஸ் என்பவருக்கு தொந்தமான பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு…

சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் ஜெகதீஸ் என்பவருக்கு தொந்தமான பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று (அக்.31) பனியன் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி ஒன்று பனியன் நிறுவன குடோனுக்குள் விழுந்தது.

இதில் நிறுவனத்துக்குள் இருந்த பொருட்களில் தீ பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென எறிந்து குடோன் முழுவதும் பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : #AndhraPradesh | இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து – ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்!

அவர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.