சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சி பி.கண்ணுக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன்- பழனியம்மாள் தம்பதிக்கு மூன்று மகள்களும் 19 வயதேயான நித்யபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு வரை படித்த நித்யபிரசாத் நான்கு ஆண்டுகளாக மனநல பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இவர் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபடுவதுடன் அவர்களை தாக்குவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தனது தாய் பழனியம்மாளிடம் நேற்றிரவு தகராறு செய்த நித்யபிரசாத், ஒரு கட்டத்தில் தனது தாய் பழனியம்மாளை வெட்டிக் கொலை செய்து தலையை துண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் இடத்தில் இருந்து நித்யபிராத் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நித்யபிரசாத்தை, தேடி வருகின்றனர்.







