தொழில்நுட்பம்

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள BARS APP

பேஸ்புக் நிறுவனம் வளரும் ராப்பர்களுக்காக BARS என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கடந்த வருடம் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை கடந்த வருடம் தடை செய்தது. இதனால், டிக்டாக் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
தொடர்ந்து பலமுறை இந்திய சந்தையில் நுழைய டிக்டாக் முயன்றது. இருப்பினும் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான சட்டங்களால் அது முடியாமல் போனது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் இடத்தை நிறப்புவதற்காக பார்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை பேஸ்புக்கின் R&D குழு உருவாக்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த வீடியோ பதிவு செய்ய எந்த சிறப்பு திறனும் தேவையில்லை. இந்த அப்ளிகேசனானது தனித்துவமாக ராப்பர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ராப் மியூஸிக் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் அதற்கு தகுந்தார்போல் வரிகளை உருவாக்கி ராப்பர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். மேலும், பல வித பில்டர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசன் தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூகுள் சாட்களில் விரைவில் எச்சரிக்கை பேனர்கள்!

EZHILARASAN D

OTP-ஐ குறிவைத்து பயனர்களின் வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் ஹேக்கர்கள்!

Dhamotharan

ட்விட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

EZHILARASAN D