முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா – டி20 அட்டவணை வெளியீடு

2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது.…

2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தொடங்கும் போட்டிகள் நவம்பர் 13ந்தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுடன் பாக்கிஸ்தான் மோதும் இந்த ஆட்டம், அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவுள்ளதாக அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.