சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள்…

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள் பயிர் செய்வதற்காக பயிர்க்கடன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நிகழ்ந்த தவறுகளால் பயிர்க்கடன் வழங்க முடியாமல் வேளான் பணிகள் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மற்ற மாவட்டங்கள் போன்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரம் விவசாயிகளின் 501.69 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.