முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படும் என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் மூவர்ணக் கொடியைப் பறக்க விடவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ‘ஹர் கர் திரங்க’ என்ற முழக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்படி சுதந்திர தினத்திற்கு 3 நாட்கள் முன்பாகவே மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் முகப்பு பக்கங்களில் தேசியக் கொடியை வைக்குமாறும் கோரிக்கை வைத்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெரும்பாலானோர் தங்களது சமூக ஊடகங்களின் முகப்பு பக்கங்களில் தேசியக் கொடி புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மண்டலத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படுவதாக என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார். இந்த திட்டம் இந்திய அரசின் ‘அசாதிக் கா அம்ருத் மஹோத்ஸவ்’ திட்டத்தின் ஒரு பகுதியாகத் துவங்கப்பட்டது. அதன் படி 30×20 அங்குலம் கொண்ட மூவர்ணக் கொடி ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மண்டலத்திலுள்ள 2,191 அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விநியோகிக்கப்படுகிறது. 20 தலைமை அஞ்சலகங்கள், 545 துணை அஞ்சலகங்கள், மற்றும் 1626 கிளை அஞ்சல் அலுவலகங்கள் என அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடி கிடைக்கும். அஞ்சல் அலுவலகம் அருகில் இல்லாத மக்கள் http://www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நாட்டில் உள்ள 1.60 லட்சம் தபால் நிலையங்கள் தேசியக் கொடி விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தங்கத்தமிழ் செல்வன் மீது கூடலூர் நகர செயலாளர் புகார்!

Niruban Chakkaaravarthi

மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை – அமைச்சர்

Halley Karthik

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இடமாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

EZHILARASAN D