முக்கியச் செய்திகள்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம்
நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நம் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி மிக மோசமாக ஏற்பட்டு தமிழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதி வசூலித்து அரிசி, மருந்து போன்ற
அத்தியாவசியப் பொருட்கள் வழங்க தமிழக முதலமைச்சர் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அவரிடம் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்ச ரூபாய் நிதி அளித்து அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சில பிரச்னைகள் குறித்து அவர்
கவனத்திற்கு கொண்டு வந்தோம். குறிப்பாக, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி
மரணம் குறித்தும், அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் தொடர்ச்சியாக பள்ளி,
கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்து விரிவான மனுவையும் அளித்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு தயக்கம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார். எந்த சூழ்நிலையிலும் உண்மையான குற்றவாளிகள் தப்பவிடக்கூடாது. வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகள் கைது செய்யப்படவும் கூடாது என்று கோரிக்கை வைத்தோம். அதனையும் ஏற்றுக் கொண்டார். இதில் நீதிமன்றங்களே முறையாக செயல்படவில்லை. ஶ்ரீமதியின் பெற்றோர் உடற்கூராய்வின்போது தங்கள் மருத்துவரை அனுமதிக்க வேண்டும்
என்று கேட்டதைக் கூட மறுத்துவிட்டது. அது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும்
தெரிவித்தோம்.

மேலும், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் அறிவிப்பது வழக்கம். இந்த முறை காப்பீட்டு நிறுவனங்கள் வராத காரணத்தால் நிதி
ஒதுக்கவில்லை. நேற்று சம்பாவிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது குறித்து
கேட்டபோது குறுவை விவசாயிகளுக்கு வெள்ளத்தால் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த நஷ்டத்தை தமிழக அரசே ஏற்கும், விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்றார். போக்குவரத்து தொழிலார்கள் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத் தொகையை அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கேட்டு கொண்டுள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டது குறித்து அந்த மாவட்ட கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்துள்ளது குறித்தும் தெரிவித்தோம். அதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

Vandhana

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Arivazhagan Chinnasamy

வீரத்தின் முதல் வித்து வாஞ்சிநாதன்!

Vandhana