வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து…

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அன்றைய நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், போராட்டம் நடைபெறும் நாட்களில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: “தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டே தேவையில்லை: அண்ணாமலை”

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயல் எனக்கூறியுள்ள போக்குவரத்துத் துறை, இதனை மீறி போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என மின்சார வாரியமும் தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.