துபாய் எக்ஸ்போவில் மொழிபெயர்ப்பு மென்பொருளான ஐலேசா-வை ஆழி செந்தில்நாதன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
துபாயில் எக்ஸ்போ கண்காண்ட்சி உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் எக்ஸ்போ கண்காட்சியிAazhi Senthilnathan
ல் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பமான ஐலேசாவை, லேங்ஸ்கேப் மொழித்தீர்வு தனிவரை நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆழி செந்தில்நாதன் ஐலேசா-வை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
துபாய் எக்ஸ்போ போன்ற, உலகளாவிய நிகழ்ச்சியில், ‘ஐலேசா’ தயாரிப்பை அறிமுகப்படுத்துவதை விட வேறு என்ன சிறப்பு இருந்துவிட போகிறது என தெரிவித்தார். அப்போது, இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
மேலும், ஐலேசா, பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள ஆழி செந்தில்நாதன், “கூகிள் டிரான்ஸ்லேட் போன்ற இயந்திர மொழிபெயர்ப்புக் கருவிகளின் மொழிபெயர்ப்பு துல்லியமாக இருப்பதில்லை. ஆனால், அவை மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள்தான். அந்த மொழிபெயர்ப்பை மனித மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது எடிட்டர்கள் திருத்திச் செம்மைப்படுத்துவற்கு சில முறைகள் உள்ளன. அந்த முறைகளை அடிப்படையாகக் கொண்டதே ஐலேசா” என தெரிவிக்கிறார்.
மேலும், புத்தகங்கள், செய்திகள், கட்டுரைகள், தகவல்கள், இணைய தளங்கள், மென்பொருள்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், சமூக ஊடகப் பதிவுகள், பாடங்கள் என அனைத்துமே இனிவரும் காலத்தில் இயந்திர மொழிபெயர்ப்புகளினூடாகவே மொழிபெயர்க்கப்படும். இந்த முகநூல் உள்பட அனைத்தும் இயந்திர மொழிபெயர்ப்பால் மொழிமாற்றம் செய்யப்படுவதை அனைவரும் அறிவீர்கள் என குறிப்பிடுகிறார். இதில், உள்ளடக்கத்தை text, docx, pptx, xlsx போன்ற பல கோப்பு வடிவங்களில் ஏற்றி, தானாகவே மொழிபெயர்க்கவைத்து, திருத்தம் செய்து பிறகு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அவர் விவரிக்கிறார்.
அதேபோல, வேர்டு, இன்டிசைன், பவர்பாயின்ட் போன்ற கோப்புகளில் பணியாற்றும்போது formatting உள்ளிட்டவற்றை அப்படியே மொழிபெயர்ப்பினூடாக மாற்றிக்கொள்ளலாம். மறுபடியும் லேஅவுட், டிடிபி செய்யாமலேயே, இதைப் போல பல வசதிகளைக் கொண்டதுதான் Ailaysa-வின் சிறப்பு எனவும், நீங்கள் தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக இருந்தால், Ailaysa மூலமாக உங்கள் மொழிபெயர்ப்புச் சேவையை மற்றவர்களுக்கு அளித்து சம்பாதிக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.
மேலும், வாருங்கள், ஒரு புதிய உலகில் சந்திப்போம். கோடிக்கணக்கான சொற்கள் தமிழுக்கு வரவும் தமிழின் கோடிக்கணக்கான சொற்கள் உலக மொழிகளுக்குச் செல்லவும் வழிவகுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.










