முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐ.ஏ.எஸ்.ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய தமிழ்நாடு டிஜிபியான ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் (30-06-2021) முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.ஜூலை 1ம் தேதி சைலேந்திர பாபு தமிழ்நாடு டி.ஜி.பியாக பதவியேற்பார்.

யார் இந்த சைலேந்திர பாபு?

சைலேந்திர பாபு IPS, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை இந்திய கப்பற்டையில் பணியாற்றியவர். இவர் 1987-ம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். 1989ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினார். தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர், திருச்சி டிஐஜி, வடக்கு மண்டல ஐஜி, லஞ்ச ஒழிப்புத் துறை, சிறைத்துறை என அனைத்து பிரிவுகளிலும் தடம்பதித்தார்.

மேலும் ரயில்வேத்துறையில் டிஜிபியாக பணியாற்றியபோது, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். உடற்பயிற்சி, விளையாட்டு, உணவுக்கட்டுப்பாட்டில் பெரும் ஈடுபாடு கொண்ட சைலேந்திரபாபு, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர்களுக்கு கண்காணிப்பாளராகவும் நியமனம் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன்னம்பிக்கை சார்ந்த உரைகளை ஆற்றியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி குறிப்புகள், தன்னம்பிக்கை உரைகளையும் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார். ‘நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம்”, ”சாதிக்க ஆசைப்படு” உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குடியரசுத்தலைவர் விருது, பிரதம மந்திரி விருது, தமிழ்நாடு முதலமைச்சரின் கேலண்டரி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Advertisement:

Related posts

பிரதமர் வருகை: போக்குவரத்து மாற்றம்

Niruban Chakkaaravarthi

ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Ezhilarasan

ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே தகவல்!

Halley karthi